Sunday, July 24, 2011

குற்றால சாரல் திருவிழா: அமைச்சர் கோகுல இந்திரா துவக்கி வைத்தார்

குற்றாலம்: குற்றாலத்தில் சாரல் திருவிழா துவங்கியது. இதை சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

குற்றாலத்தில் நேற்று சாரல் திருவிழா துவங்கியது. இதை சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார்.

Monday, July 18, 2011

2ஜி வழக்கு: ராசாவிடம் சிபிஐ இன்று 1 மணி நேரம் விசாரணை

 ஜூலை,18: 2 ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் 2 பேரிடம் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் விசாரணை நடத்தி சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜூலை.18: 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு சமச்சீர் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி கடந்த

Sunday, July 17, 2011

நெல்லை மாவட்டத்தில் நிலமோசடி தொடர்பாக 300 மனுக்கள் மீது விசாரணை: டிஎஸ்பி

ஜூலை 16: நில மோசடி தொடர்பாக 300 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டிஎஸ்பி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை கூறினார்.  இதுகுறித்து வள்ளியூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குனேரி, வள்ளியூர் பகுதியில் நிலமோசடி புகார்கள் அதிகம் வந்துள்ளன. இப்பகுதிகள்தான் மோசடி புகார்களில்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய மேளா

திருநெல்வேலி, ஜூலை 16: பாளையங்கோட்டையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய மேளா சனிக்கிழமை நடைபெற்றது.  ÷பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீனில் நடைபெற்ற ஓய்வூதிய மேளாவுக்கு ஓய்வு பெற்ற லெப்டினட் கர்னல் பாளையத் ஷியாம் பிரசாத் தலைமை வகித்தார். ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்னைகள், வங்கிகளில் பணம் பெறுவதில் உள்ள கஷ்டங்கள் குறித்து அவர் ஓய்வூதியர்களிடம் கேட்டறிந்தார்.  ÷ஓய்வூதியர்கள் அளித்த மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. மேலும் மருத்துவ வசதி பெறுவது தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டன.  ÷இந்நிகழ்ச்சியில் இ.சி.எச்.எஸ். மருத்துவமனை அதிகாரி ஓய்வு பெற்ற கர்னல் விக்டர், அதிகாரிகள் எம். டேவிட், முன்னாள் ஹவில்தார் சக்திவேல், ஒருங்கிணைப்பாளர் கே. முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.  முகாமில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.